» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது : தூத்துக்குடியில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேச்சு!
திங்கள் 6, ஜூலை 2026 10:29:47 AM (IST)

நம்முடைய ஆட்சி அன்பு மற்றும் நம்பிக்கை மூலம் மலர்ந்துள்ளது. இந்த மக்களாட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது; மக்களாட்சி என்றும் தொடரும் என்று அமைச்சர் ஸ்ரீநாத் பேசினார்.
தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 52-வது பிறந்தநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசியதாவது: "விஜய் தமிழக மக்களின் இதயங்களில் குடிஇருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு அவர் வந்து சென்ற பிறகு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அரசியல் எழுச்சி ஏற்பட்டது.
நம்முடைய ஆட்சி அன்பு மற்றும் நம்பிக்கை மூலம் மலர்ந்துள்ளது. இந்த மண்ணின் மைந்தன் மக்களாட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது; மக்களாட்சி என்றும் தொடரும். இந்த ஆட்சிக்கு மக்கள் எல்லோரும் விசுவாசமாக இருந்து வருகிறார்கள். நானும் உண்மையாக உங்களோடு அண்ணன் தம்பியாக, அக்கா தங்கையாகப் பாசத்தோடு பழகிப் பணியாற்றுவேன். இந்தத் தேன்கூட்டை யாராலும் சேதப்படுத்த முடியாது, அனைவருக்கும் நல்லதே நடக்கும்" என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் 25 பேருக்குத் தையல் இயந்திரங்கள், 800 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்குப் மிதிவண்டிகள், சேலைகள், இஸ்திரி பெட்டிகள், எவர்சில்வர் பாத்திரங்கள் உட்பட மொத்தம் 2,000 பேருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்டப் பொறுப்பாளர் சாமுவேல்ராஜ், துணைப் பொறுப்பாளர் கோல்டன், பொருளாளர் சிவக்குமார், சின்னத்திரை பிரமுகர் நிலாணிசதீஷ், பகுதி இணைப் பொறுப்பாளர் மணிகண்டன், துணைப் பொறுப்பாளர் உதயா, பொருளாளர் சந்தனராஜ், திருச்சிற்றம்பலம், டைகர்சிவா, செயற்குழு உறுப்பினர்கள் பொன்வேல், குரு, மகேஸ்வரி, பத்மா, ஸ்ரீராம் விக்னேஷ், வட்டப் பொறுப்பாளர்கள் குருசாமிராஜா, மகாராஜா, லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு பகுதிப் பொறுப்பாளர் ஆனந்தகுமார் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)

பயன்பாடின்றி முடங்கிய பேட்டரி கார் சேவை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அவலம்!
திங்கள் 6, ஜூலை 2026 3:21:52 PM (IST)


