» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுமக்களுக்குப் பாதுகாப்பே இல்லை: கனிமொழி எம்பி கடும் கண்டனம்!

வெள்ளி 3, ஜூலை 2026 12:12:51 PM (IST)

வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: "திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது.

முன்விரோதம் காரணமாகத் தொடர்ந்து நீடித்து வரும் இப்பிரச்சனையில் தற்போதைய அரசு மெத்தனமாகச் செயல்படக் கூடாது. இ கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும், பதற்றம் நிலவும் அப்பகுதியில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory