» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

கத்தார் நாட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் இயற்கை எரிவாயு தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ‘பர்சான்' ஆலை, ஈரான் - அமெரிக்கா போர் காரணமாகக் கடந்த 4 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அமைதி ஒப்பந்தம் உருவாகும் சூழலில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்ற போது எதிர்பாராதவிதமாகப் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுத் தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் பலியாகினர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்தில் பலியானவர்களில் 3 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது:
பபித் (26): ராதாபுரம் தாலுகா பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த தங்கராஜா மகன்.
சுவின் (24): பணகுடி அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகன்.
சஜித்குமார் (25): பணகுடி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜா மகன்.
உடல்களைக் கொண்டு வரக் கோரிக்கை:
கடந்த ஜூன் 20 அன்று குடும்பத்தினருடன் போனில் பேசிய சஜித்குமார், ஜூன் 21 அன்று நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்த தகவல் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கத்தாரிலிருந்து விரைந்து சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் மத்திய அரசுக்கும் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பியுள்ள மனுவில், விபத்தில் பலியான பபித், சுவின், சஜித்குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும், உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்களுக்கு தவெக அரசு செய்யும் துரோகம் : நயினார் நாகேந்திரன் சாடல்!
சனி 27, ஜூன் 2026 8:07:35 AM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)


