» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண்கள் நீக்கம்? தமிழக அரசு விளக்கம்!
வியாழன் 4, ஜூன் 2026 4:05:47 PM (IST)
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் பொய் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் முறைப்படி விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசின் முன்னோடித் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் புதிய பயனாளிகள் யாரும் சேர முடியாது என்றும், ஏற்கனவே பயன்பெற்று வந்தவர்களில் சுமார் 80 லட்சம் பெண்கள் திட்டத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவி வந்தது. இத்தகவல் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இது முற்றிலும் தவறான மற்றும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாகத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ மறுப்புப் பதிவில், மகாராஷ்டிராவில் அம்மாநில அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உதவித்தொகை திட்டத்திலிருந்து தகுதியற்ற 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்தச் செய்தியைச் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்து, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டு விட்டதாகத் தவறான வதந்தியைச் சமூக வலைதளங்களில் பரப்பத் தொடங்கியுள்ளனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
1.31 கோடி பெண்களுக்குத் தொடர்ந்து விநியோகம்:
தமிழ்நாடு அரசு இதுபோன்று பயனர்கள் நீக்கம் தொடர்பான எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1.31 கோடி பெண்கள் தொடர்ந்து பயன் பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதத்திற்கான மாதாந்திர உரிமைத் தொகை ரூ. 1,000/- கூடப் பயனாளர்களின் வங்கிச் கணக்குகளில் எவ்வித தடையுமின்றி முறைப்படி வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் பெண்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இத்தகைய ஆதாரமற்ற போலிச் செய்திகளையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தெளிவான விளக்கத்தைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நீடித்து வந்த வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" நயினார் நாகேந்திரன் பேட்டி
வெள்ளி 5, ஜூன் 2026 4:47:36 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி : புதிய அரசியல்... புதிய பாதை! – அண்ணாமலை அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 3:47:51 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சிபிஎம் கண்டனம்! – புதிய கூட்டணி விவகாரத்தில் அரசியல் மோதல்
வெள்ளி 5, ஜூன் 2026 12:00:45 PM (IST)

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் : கட்சித் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:09:38 AM (IST)



தமிழருவிJun 4, 2026 - 05:22:23 PM | Posted IP 172.7*****