» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு நியமனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:45:07 AM (IST)
தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசும், மதுரை போலீஸ் கமிஷனராக கபில்குமார் சரத்கரும் பதவியேற்கிறார்கள்.
இதற்கான அரசு உத்தரவு விவரம் வருமாறு:-
1. பண்டி கங்காதர் - சென்னை கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார்.
2. திஷா மிட்டல் - சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், சென்னை மேற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
3. பகலவன் - காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பதவியேற்பார்.
4. கபில்குமார் சரத்கர் - தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் இவர், மதுரை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார்.
5. அபிஷேக் தீட்சித் - மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. லோகநாதன் - காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர், சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளர்.
7. திருநாவுக்கரசு - காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்பார்.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" நயினார் நாகேந்திரன் பேட்டி
வெள்ளி 5, ஜூன் 2026 4:47:36 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி : புதிய அரசியல்... புதிய பாதை! – அண்ணாமலை அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 3:47:51 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சிபிஎம் கண்டனம்! – புதிய கூட்டணி விவகாரத்தில் அரசியல் மோதல்
வெள்ளி 5, ஜூன் 2026 12:00:45 PM (IST)

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் : கட்சித் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:09:38 AM (IST)


