» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறப்பு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி!
புதன் 3, ஜூன் 2026 10:11:59 AM (IST)
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் திட்டமிட்டபடி நாளை (ஜூன் 4) முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பேசியதாவது: "முதலமைச்சரின் உத்தரவின்படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் பருவமழை மற்றும் இயற்கைப் பேரிடர்களின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்கு அரசு இயந்திரமும், சம்பந்தப்பட்ட துறைகளும் மிக வேகமாகச் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். பருவமழை பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அவசரக் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு 24 மணி நேரமும் முழு தயார் நிலையில் உள்ளது.
இதற்காகத் தமிழகத்தின் 3 முக்கிய இடங்களில் ரேடார் தொழில்நுட்பம் மூலம் தீவிரக் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்படும்." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!" நயினார் நாகேந்திரன் பேட்டி
வெள்ளி 5, ஜூன் 2026 4:47:36 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி : புதிய அரசியல்... புதிய பாதை! – அண்ணாமலை அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 3:47:51 PM (IST)

பெண் குழந்தையை சாக்குப்பையில் போட்டுத் துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கைது!
வெள்ளி 5, ஜூன் 2026 12:45:29 PM (IST)

பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கு சிபிஎம் கண்டனம்! – புதிய கூட்டணி விவகாரத்தில் அரசியல் மோதல்
வெள்ளி 5, ஜூன் 2026 12:00:45 PM (IST)

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல் : கட்சித் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:09:38 AM (IST)


