» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.60% தேர்ச்சி : மாநில அளவில் தூத்துக்குடி 9வது இடம்!
புதன் 20, மே 2026 10:27:09 AM (IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் 96.60 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 159 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
நடப்பு 2025-2026 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாவட்டத்தில் இருந்து மொத்தம் 21,762 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 21,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.60% ஆகும்.
159 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 308 பள்ளிகளில், 159 பள்ளிகள் தங்களது மாணவர்களை 100% முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 89 அரசுப் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100% நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக முத்திரை பதித்துள்ளன.
சாதனைகளைப் புரிந்த மாணவச் செல்வங்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 94.31% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 10:40:33 AM (IST)

தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
புதன் 20, மே 2026 8:48:59 AM (IST)

திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் மீட்பு நடவடிக்கை : கோவில் நிர்வாகம் தகவல்!
புதன் 20, மே 2026 8:28:49 AM (IST)

அனிதா ராதாகிருஷ்ணனின் தரக்குறைவான பேச்சு சபை நாகரிகமா? ஸ்ரீநாத் எம்.எல்.ஏ கண்டனம்!
செவ்வாய் 19, மே 2026 8:46:45 PM (IST)

திருச்செந்தூர் சாலையில் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி!
செவ்வாய் 19, மே 2026 8:01:39 PM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)


