» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உளவுத்துறை ஐ.ஜி-யாக அஸ்ரா கர்க் நியமனம் : தமிழக அரசு உத்தரவு!

புதன் 13, மே 2026 3:44:08 PM (IST)

தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பதவியாகக் கருதப்படும் உளவுத்துறை ஐ.ஜி பதவியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க், ஐ.பி.எஸ் உளவுத்துறை ஐ.ஜி-யாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது உளவுத்துறை ஐ.ஜி-யாகப் பணியாற்றி வரும் அவினாஷ் குமாருக்குப் பதிலாக அஸ்ரா கர்க் இந்த முக்கியப் பொறுப்பை ஏற்கிறார். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளுவதில் உளவுத்துறை ஐ.ஜி பதவி மிக முக்கியமானது என்பதால், இந்த நியமனம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையான மற்றும் அதிரடியான அதிகாரி என்று பெயரெடுத்த அஸ்ரா கர்க், ஏற்கனவே தென் மண்டல ஐ.ஜி-யாகப் பணியாற்றியபோது பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory