» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார் விஜய்: நேரு உள்விளையாட்டரங்கில் கோலாகலம்!
ஞாயிறு 10, மே 2026 11:15:05 AM (IST)

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மதியம் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அவர்கள், விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் இணைந்து தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், விசிக நிர்வாகிகள், பாஜக தலைவர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய முதலமைச்சருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்துள்ளது. எனவே, ஆளுநரின் அறிவுறுத்தலின்படி வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி, தனது அரசுக்கான பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டியுள்ளது.
திரைத்துறையிலிருந்து மக்கள் பணியாற்ற வந்த விஜய், தற்போது மாநிலத்தின் மிக உயரிய பொறுப்பை ஏற்றுள்ளதால், தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:31:40 AM (IST)

சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:49:45 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:38:45 AM (IST)

தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 10:29:24 AM (IST)

தொகுதி மறுவரையறை கூட்டம் திசைதிருப்பும் நாடகம் : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:17:18 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)


