» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி: மே 5-இல் தண்டனை அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:29:47 PM (IST)
புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான கருணாஸ் என்பவரைக் குற்றவாளி என அறிவித்து புதுச்சேரி நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம், புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி மாயமானார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு, வீட்டின் அருகிலிருந்த கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், போராட்டங்களையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (57) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் குற்றவாளியான விவேகானந்தன் சிறை கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால், முதல் குற்றவாளியான கருணாஸ் மீது மட்டும் வழக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் அனைத்துக் கட்ட விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரைச் சிறுமி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். குற்றவாளி கருணாஸிற்கான தண்டனை விவரங்கள் வரும் மே மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அரசுத் தரப்பு வாதம்: "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குச் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும்" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரம் மே 5-ஆம் தேதி வெளியாக உள்ளதால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றிச் சான்றிதழுடன் பனையூர் வாருங்கள்: த.வெ.க. வேட்பாளர்களுக்கு விஜய் உத்தரவு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:22:33 PM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)

மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு: அரசாணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:43:33 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)


