» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது; இருதரப்பு மோதல் - எஸ்பி நேரில் ஆய்வு
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:52:27 AM (IST)
கடையநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக, கல்லூரி மாணவர் மற்றும் அவரது தாயார் அரிவாளால் வெட்டப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சாலை மறியல் மற்றும் இருதரப்பு கல்வீச்சால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (19) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இதில் ஏற்கனவே விக்னேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார்.
நேற்று காலை, தனது மோட்டார் சைக்கிளை மீட்பதற்கான ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்கத் தனது தாயார் மாடத்தியுடன் விக்னேஷ் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் மாடத்திக்கும் கைவிரலில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து விக்னேஷின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் செங்கோட்டை - கடையநல்லூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இந்த கல்வீச்சில் 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய முத்துப்பாண்டியைத் தேடி வருகின்றனர்.
தற்போது அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், தென்காசி டி.எஸ்.பி. அதியமான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி வாசலிலும், காசிதர்மம் கிராமத்திலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)

மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு: அரசாணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:43:33 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி : கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:46:01 AM (IST)


