» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் சுட்டதில் காயம்: தென்காசியில் பாதுகாப்பு இல்லை - தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட வாலிபர் புகார்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:06:24 AM (IST)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், உயர்நீதிமன்ற உத்தரவின்படி மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் பனைத் தொழிலாளி மணிகண்டன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே பனை மரத்திலிருந்து கள் இறக்கியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தனது துப்பாக்கியால் மணிகண்டனைச் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி மருத்துவமனையில் தனது மகனுக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருவதாகவும் மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். தனது மகனின் உயிர் பாதுகாப்பு கருதி அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மணிகண்டனை வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்பி சிலுவை அவர்களின் முயற்சியால், மணிகண்டன் தென்காசி மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்டுத் தூத்துக்குடியில் உள்ள அற்புதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துத் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், "தென்காசி மருத்துவமனையில் இருந்தபோது தினமும் போலீசார் வந்து என்னையும் என் குடும்பத்தாரையும் மிரட்டி வந்தனர். அங்கு எனக்குப் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தேன். எனது உயிருக்கும் குடும்பத்தின் பாதுகாப்புக்கும் பயந்துதான் தூத்துக்குடி மருத்துவமனைக்கு வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
தற்போது தூத்துக்குடியில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம்! பின்னணி என்ன?
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:50:15 PM (IST)

மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு: அரசாணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:43:33 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது; இருதரப்பு மோதல் - எஸ்பி நேரில் ஆய்வு
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:52:27 AM (IST)


