» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்பத் தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை : அண்ணன் மகன் கைது - நெல்லையில் பயங்கரம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:04:24 AM (IST)
நெல்லை அருகே மானூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கோவில் பூசாரி ஒருவர் அவரது அண்ணன் மகனாலேயே சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மானூரை அடுத்த பள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (60). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். கணபதிக்கும், அவரது அண்ணன் மகனான முருகன் (35) என்பவருக்கும் இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று பகலில் கணபதி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகனுக்கும், கணபதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது சித்தாப்பா என்றும் பாராமல் கணபதியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணபதி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின்னர் முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார், கணபதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய முருகனைப் பிடிக்கப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த முருகனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் பள்ளிக்கோட்டை கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை: வேல்முருகன் கோரிக்கை
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:20:15 AM (IST)

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே உக்கிரமாகும்..!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:14:35 AM (IST)

மூதாட்டி மீது மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு: தூத்துக்குடி கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் கைது!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:08:16 AM (IST)

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு : கல்விச் சான்றிதழ் வாங்கச் சென்றபோது சோகம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:46:46 AM (IST)

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:20:15 PM (IST)

தூத்துக்குடியில் வாட்டும் வெயில்: பசுமைப்பந்தல் அமைக்க ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மனு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:05:06 PM (IST)


