» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும்!

புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி "மறுமார்க்கத்தில் இருந்து தூத்துக்குடி வரவேண்டிய இணை ரயில் மிகத் தாமதமாக வருவதன் காரணமாக, தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் எண் 01006 நேர மாற்றம் (செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி - மும்பை CSMT சிறப்பு ரயில் (எண் 01006 ) மாலை 03.30 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு புறப்படும். 

இந்த ரயில் இன்று தனது வழக்கமான நேரத்தில் இருந்து சுமார் 8 மணி நேரம் தாமதமாகப் புறப்படும். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, இந்த நேர மாற்றத்தைக் கவனித்து அதற்கேற்ப ரயில் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த தகவல்கள் பயணிகளின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டு வருவதாகவும், ரயில் நிலைய தகவல் பலகைகளில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory