» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ்: தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு!

புதன் 22, ஏப்ரல் 2026 11:32:36 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாகத் தமிழக ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னதாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு வழங்கப்பட்ட ஆதரவு தற்போது முறைப்படி திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதை விட, மக்கள் நலனை முன்னிறுத்தி வாக்களிப்பதே சிறந்தது என்ற நிலையை ஆயர் பேரவை எடுத்துள்ளது. 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்: பொதுமக்கள் மற்றும் திருச்சபை உறுப்பினர்கள், தத்தமது தொகுதிகளில் மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொள்ளும் வேட்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும். ஜனநாயகக் கடமையை ஆற்றும்போது வேட்பாளரின் தனிப்பட்ட தகுதி மற்றும் மக்கள் சேவை மனப்பான்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

SIVAApr 22, 2026 - 05:23:37 PM | Posted IP 172.7*****

GOOD

IndiaNApr 22, 2026 - 04:22:25 PM | Posted IP 162.1*****

ommun kidikavillaiya??

BalaApr 22, 2026 - 03:46:48 PM | Posted IP 172.7*****

DMK will win

அரசியல் பார்வையாளர்Apr 22, 2026 - 12:08:47 PM | Posted IP 172.7*****

மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட தருணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory