» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)



சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பாக பொருநை அருங்காட்சியகத்திலிருந்து மினி மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்.

2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராமப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், சுய உதவிக்குழுவினர்களின் கோலப்போட்டி, ராட்சத பலூனில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு, பொதுமக்கள், முதல்முறை வாக்காளர்கள் மாதிரி வாக்குச்சாவடி மூலம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆட்டோ, இருச்சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில் தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவ, மாணவியர்களின் சதுரங்க போட்டி, கையெழுத்து இயக்கம், காய்கறிகள், நவதானியங்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கடலில் நீரில் மூழ்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, பொருநை அருங்காட்சியகத்திலிருந்து 2026-சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100% வாக்களிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மினி மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (21.04.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மினி மாரத்தான் போட்டியானது பொருநை அருங்காட்சியகத்திலிருந்து திருமால்நகர் வழியாக பொதிகை நகர், ஜோஸ் ஸ்மார்ட் பள்ளி வழியாக சுமார் 3 கி.மீ வரை இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) லதா உட்பட அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory