» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)
நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ‘‘நான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதால் எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன்.ஆனால் அவர் எனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று நடந்தது. அப்போது ‘நோ கேஸ்ட், நோ ரிலீஜியன்’ என வாசகம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த நடிகர் பார்த்திபன், தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து நீதிபதி, ஏப்.29-ம் தேதிக்குள் மனுதாரரான பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும் பார்த்திபனின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி, அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியது தொடர்பான நகலை ஏப்.29 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்: தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:37:19 PM (IST)

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

யூடியூபர் முக்தார் விவகாரம் : அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - நாடார் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:52:35 AM (IST)

வெற்றி வாகை சூடுவோம்; வரலாறு படைப்போம் : வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:45:56 AM (IST)

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:21:00 AM (IST)

