» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாயமான பிளஸ்-2 மாணவி 2 மணி நேரத்தில் மீட்பு: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்!

வியாழன் 19, மார்ச் 2026 8:20:09 AM (IST)

காயல்பட்டினத்தில் மாயமான பிளஸ்-2 மாணவியை, புகார் அளிக்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை தேர்வு எழுதச் சென்றார். தேர்வு முடிந்தும் அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது குறித்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில், ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் திலீபன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் உதவி ஆய்வாளர் முகிலரசன், தலைமைக் காவலர்கள் ஜெயகாந்த், வேலுமணி, பெண் தலைமைக் காவலர் சுகந்தி மற்றும் காவலர் ஜெபஸ்டின் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டனர்.

காயல்பட்டினம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவி, இளைஞர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. செல்போன் சிக்னல் மற்றும் இதர ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், அவர்கள் பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலீசார் துரிதமாகச் செயல்பட்டு மாணவியை மீட்டனர். வழக்குப் பதிவு செய்த இரண்டே மணி நேரத்திற்குள் மாணவி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியிலிருந்து மீட்கப்பட்ட மாணவி, நேற்று தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இன்று வியாழக்கிழமை மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அவர் மேஜர் என்பதால், சட்டப்படி அவர் யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory