» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காணாமல் போன சிறுமி ஒரு மணி நேரத்தில் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!
வியாழன் 19, மார்ச் 2026 8:04:56 AM (IST)
திருச்செந்தூர் அருகே காணாமல் போனதாகத் தேடப்பட்ட 7 வயது சிறுமியை, காவல்துறையினர் ஒரு மணி நேர தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி, அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது 7 வயது மகள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில், திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் மதுரைவீரன், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்த நிலையிலும், போலீசார் தனிப்படைகளாகப் பிரிந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பின், சிறுமியின் வீட்டின் பின்புறம் இடிந்த நிலையில் இருந்த ஒரு பழைய வீட்டின் கதவு மறைவில் அச்சத்துடன் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, "தன்னை நான்கு பேர் தூக்கிச் சென்றதாக" அவர் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
எனினும், அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நடமாடினார்களா என போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இருள் மற்றும் தனிமை காரணமாக ஏற்பட்ட பயத்தில் சிறுமி அவ்வாறு கூறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்குள் சிறுமியை மீட்ட போலீசாரின் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.டி.எம்-மிற்கு கொண்டு சென்ற ரூ.30 லட்சம்: பறக்கும் படை சோதனையில் விடுவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 8:34:01 AM (IST)

த.வெ.க. தலைமையில் தான் ஆட்சி : இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு!
வியாழன் 19, மார்ச் 2026 8:28:45 AM (IST)

உடன்குடி அனல் மின்நிலையத்தில் ஜூனில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி!
வியாழன் 19, மார்ச் 2026 8:25:48 AM (IST)

மாயமான பிளஸ்-2 மாணவி 2 மணி நேரத்தில் மீட்பு: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்!
வியாழன் 19, மார்ச் 2026 8:20:09 AM (IST)

திருச்செந்தூர் கோயில் அருகே கடல் உள்வாங்கியது: பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடல்!
வியாழன் 19, மார்ச் 2026 8:15:36 AM (IST)

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)

