» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேற்கு ஆசியப் போர்: வளைகுடா நாடுகளில் தவித்த 217 இந்தியர்கள் சென்னை வருகை!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:35:58 AM (IST)

துபாயிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பயணிகள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் சூழலில், துபாய் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் அங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் ஏராளமான இந்தியர்கள் தவித்து வந்தனர்.
வளைகுடா நாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வர, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன்படி, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ (IndiGo) நிறுவனம் சார்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பயணிகள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். வான்வெளிச் சூழலைப் பொறுத்து, துபாயின் 'எமிரேட்ஸ்' நிறுவனம் நேற்றிரவு முதல் ஒருசில விமானங்களை மட்டும் இயக்கி வருகிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தாயகம் திரும்பிய அவர்களை, குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றனர்.
விமான சேவை நிலவரம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: மஸ்கட் நகரிற்கான விமான சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. டெல்லி, திருச்சி, கொச்சி, கோழிக்கோடு மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து மஸ்கட்டிற்கு விமானங்கள் இயக்கப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காக பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கான ஏர் இந்தியா விமான சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:34:54 AM (IST)

சங்கீதாவுக்கு எதிராக தவெகவினரின் அநாகரிகப் போக்கு: விஜய் கண்டிக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:42:21 AM (IST)

திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம்: சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:28:33 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பிளஸ்-2 தேர்வுக்கு மினி ஜெராக்ஸ் பிட்: ஜெராக்ஸ் கடைகளுக்கு கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:00:20 AM (IST)

