» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)
மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தமுக்கம் முதல் நெல்பேட்டை வரையிலான புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பு வரை கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்திற்கு ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்’ என முதல்வர் பெயர் சூட்டியுள்ளார். நீளம்: சுமார் 2 கிலோமீட்டர். 61 தூண்கள் மற்றும் 62 அடுக்குகளுடன் (Spans) பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.213 கோடி செலவில் பொதுப்பணித்துறையினரால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தமுக்கம் பகுதியில் ஏறுதளமும், நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்குதளமும் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பெரிதும் உதவும். மேம்பாலத்தைத் திறந்து வைத்த கையோடு, சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளையும் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

ஏப்ரலில் தேர்தல்? பிப். 25 முதல் 27 வரை தேர்தல் ஆணையக் குழு புதுச்சேரி, தமிழகத்தில் ஆய்வு
சனி 21, பிப்ரவரி 2026 10:20:59 AM (IST)

