» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்

வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி 23 முதல் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய விட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வரும் 23.02.2026 முதல் 28.02.2026 வரை இந்த முகாம் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள சுமார் 1,07,537 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு இந்த நுண்சத்து இன்றியமையாதது.    கண் ஆரோக்கியம்: கண் குருடு ஏற்படாமல் தடுக்க இது அவசியம். குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த திரவத்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. 

அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு  1 மில்லி,   12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மில்லி. அளவில் திரவம் வழங்கப்படும், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கிப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory