» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:51:36 PM (IST)
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, திமுக அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று, சுமார் ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நீதியின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.மேலும், அரசு வேலைகளை விற்பனை செய்து ரூ.888 கோடி ஊழல் புரிந்ததாக அமைச்சர் நேரு மீது எழுந்துள்ள மற்றொரு புகார் மீதும், கூடிய விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உண்மை வெளிக்கொணரப்படும் என்ற நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்தியுள்ளது."
"மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷன் பெற்று ஊழலில் திளைக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும் நாளுக்கான 'கவுண்ட்டவுன்' (Countdown) இன்றோடு தொடங்கிவிட்டது.
கூடிய விரைவில் திமுகவினரின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் அம்பலப்படுத்தப்படும். தமிழக மக்களால் அவர்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை," என்று அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:53:08 PM (IST)

மீண்டும் வருவோம்; சாதனைகளை மிஞ்சுவோம்: பேரவையில் முதல்வர் நெகிழ்ச்சி உரை!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:27:37 PM (IST)

தி.மு.க. நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழல்: விஜய் கண்டனம்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:22:06 PM (IST)

டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:19:20 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான மேல்முறையீடு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 11:09:46 AM (IST)

