» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)
திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி; மற்றபடி அதிகாரம் என்று வரும்போது அவர்கள் தனி அணி என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி, கே.வி.பி. கார்டன் வளாகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் தொடங்கிய இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றியதைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: "டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவித்துவிட்டு, திடீரென அதனை ரத்து செய்திருப்பது ஒட்டுமொத்த உலகிற்கே தெரியும். வெறும் 'தொழில்நுட்பக் கோளாறு' என்று ஒற்றை வார்த்தையில் காரணத்தைக் கூறிவிட்டு அரசு கடந்து போய்விட்டது. ஆனால், அரசு வேலைக்காக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்துக் காத்திருந்த நமது தம்பி, தங்கைகள் இதனால் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை யாராவது யோசித்தார்களா?
ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்தத் தெரியாதவர்கள், உலக நாடுகளுடன் போட்டி போடுவதாகக் கூறிக்கொள்கிறார்கள். இளைஞர்களே, உங்கள் பெற்றோரிடம் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். வரப்போவது நம்முடைய ஆட்சி. சமூக நீதியுடன் கூடிய, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வெளிப்படையான தீர்வுகாணும் ஒரு நல்ல ஆட்சியை நாம் அமைப்போம்."
"விக்ரவாண்டி மாநாட்டில் நான் முன்வைத்த 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற அந்த அரசியல் வெடிகுண்டு, இப்போது அனைத்துக் கூட்டணிகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதற்றமடைந்து, 'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது' எனப் பேசி வருகிறார்.
அவர்களைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி; மற்றபடி அதிகாரம் என்று வரும்போது அவர்கள் தனி அணி. 'வெல்வோம் ஒன்றாக; செல்வத்தைப் பார்ப்போம் தனியாக' என்பதுதான் அவர்களின் ரகசியம். இது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள், நம்பிக்கையுடன் இருங்கள்; வெற்றி நிச்சயம்!"
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)

தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)

தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் விசில் சத்தம் : விஜய் விமர்சனம்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:57:20 AM (IST)

மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது: அன்புமணி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:05:28 AM (IST)

