» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் மாற்றம் : புதிய எஸ்பியாக மதன் நியமனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:24:31 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மூன்று முக்கிய காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (13.02.2026) அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், திருநெல்வேலி மாநகர தலைமையிட துணை ஆணையராகப் பணியாற்றி வந்த எஸ்.விஜயகுமார், திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் வகித்து வந்த 'தலைமையிட துணை ஆணையர்' பணியிடத்தை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் கூடுதலாகக் கவனிப்பார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)

தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் விசில் சத்தம் : விஜய் விமர்சனம்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:57:20 AM (IST)

மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது: அன்புமணி
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:05:28 AM (IST)

