» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவில் இணையவில்லை, அரசியலில் இருந்தே விலகுகிறேன்: குன்னம் ராமச்சந்திரன் திடீர் முடிவு.!
வியாழன் 22, ஜனவரி 2026 11:38:58 AM (IST)
திமுகவில் இணையப்போவதாக கூறியிருந்த குன்னம் ராமச்சந்திரன், அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக திடீரென அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணையப்போவதாக கூறப்பட்டது. அவரும் அதை உறுதி செய்தார்.
இந்த நிலையில், அரசியலில் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-நேற்றைய தினம் திமுகவில் இணையப்போவதாக கூறினேன். அதற்கு ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்? என்று கேட்டார். என்னுடைய மகளோ, இது அசிங்கமாக இல்லையாப்பா என்று கேட்டாள். இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.
அதனால், பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்கப் போவதில்லை. அண்ணன் வைத்திலிங்கம், தொண்டர்கள் என்னை மன்னிக்கவும். தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விரும்பிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணையப்போவதாக கூறப்பட்டது. அவரும் அதை உறுதி செய்தார்.இந்த நிலையில், அரசியலில் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-நேற்றைய தினம் திமுகவில் இணையப்போவதாக கூறினேன். அதற்கு ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்? என்று கேட்டார். என்னுடைய மகளோ, இது அசிங்கமாக இல்லையாப்பா என்று கேட்டாள். இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.
அதனால், பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்கப் போவதில்லை. அண்ணன் வைத்திலிங்கம், தொண்டர்கள் என்னை மன்னிக்கவும். தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விரும்பிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு..?
வியாழன் 22, ஜனவரி 2026 12:14:30 PM (IST)

போதை புழக்கத்தால் நடைபெறும் வன்முறைகளில் தமிழ்நாடு முதலிடம் - சீமான் விமர்சனம்!
வியாழன் 22, ஜனவரி 2026 12:07:21 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
வியாழன் 22, ஜனவரி 2026 11:52:45 AM (IST)

மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பொதுக் கூட்டம்: 15,000 போலீசார் பாதுகாப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 10:36:56 AM (IST)

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!
வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)

