» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!

செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)


சகிப்பின்மைக்கு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை; ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கனிமொழி எம்.பி. கருத்து பதிவிட்டுள்ளார். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், "கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி.கனிமொழி ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். மதம், மொழி, அடையாளம் ஆகியவற்றைத் தாண்டி கலையை உருவாக்கும் ஒரு இசைக் கலைஞரை திட்டமிட்டு குறிவைப்பதும், அதே நேரத்தில் இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ரஹ்மான் ஒரு படைப்பாளியும், உயரிய கலைஞரும் ஆவார்.

இந்த நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர். மேலும் இந்தியாவின் முதன்மை கலாச்சாரத் தூதராகவும், இந்திய விழுமியங்களின் பிரதிநிதியாகவும் திகழ்கிறார். அவர் பாரபட்சத்தையும் வெறுப்பையும் அல்ல, மரியாதையையும் நன்றியையும் பெறத் தகுதியானவர். இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory