» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)
நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளரை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உறவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே அடைச்சாணி கிராமம் இந்திரா காலனி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சரவணன் (43). இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (27). இவர் ஊட்டியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர். தற்போது விடுமுறை என்பதால் பாலமுருகன் தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று காலை சரவணனும், பாலமுருகனும் அப்பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலுக்கு குளிப்பதற்காக சென்றனர். ஆனால் நீண்டநேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று தேடினர். அப்போது சரவணன் அரிவாளால் சரமாரி வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பாலமுருகனை தேடி பார்த்தபோது, அவரை காணவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் வாய்க்காலுக்கு குளிக்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் பாலமுருகன், சரவணனை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தப்பி ஓடிய பாலமுருகனை போலீசார் மாலையில் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்றபோது ஒர்க்ஷாப் உரிமையாளரை, உறவினர் சரமாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு: முதலிடம் பெற்ற வீரருக்கு கார், சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசு!
சனி 17, ஜனவரி 2026 8:37:32 AM (IST)

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

