» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொருநை அருங்காட்சியகம்: நிதிஅமைச்சருக்கு சென்னை வாழ் நெல்லை மக்கள் பாராட்டு

வெள்ளி 2, ஜனவரி 2026 8:30:06 AM (IST)



பொருநை அருங்காட்சிகம் அமைக்க நடவடிக்கை எடுத்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை சென்னை தலைமை செயலகத்தில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தினர் பாராட்டினர்.

சென்னை தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு  தலைமையில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தினர் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்தனர். நெல்லையில் சமீபத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகம் அமைக்க வித்திட்ட அமைச்சருக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
 
நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாய் தள பேருந்து கட்டணம் அதிகமாக இருப்பதால்அதிகமாக மக்கள் பயன்படுத்துவதில்லை. ஆகவே இந்த பேருந்தை அருங்காட்சிக பேருந்து என பெயர் மாற்றி, நெல்லை சந்திப்பு, புது பஸ் நிலையம், பொருநை அருங்காட்சியகம், வி.எம் சத்திரம் மற்றும் இந்தியாவிலேய முதல் சைட் மியூசியமான ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை இணைத்து ஸ்ரீவைகுண்டத்துக்கு இயக்க வேண்டும்,

தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் 2023 மழை வெள்ளத்தில் பொதுமக்களுக்கு உதவிய தாதன்குளம் மக்கள் தங்களுக்கு இரயில்வே கொடுத்த தொகையை கனிமொழி எம்.பி  முன்னிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்குகொடுத்து, பாலக்காடு ரயில் தாதன்குளம், செய்துங்கநல்லூர் நிலையங்களில் நின்று செல்ல கோரிக்கை வைத்தனர். தற்போது நெல்லை திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள 11 ரயில் நிலையத்தில் செய்துங்கநல்லூர், தாதன்குளத்தில்மட்டும் அந்த ரயில் நின்று செல்லவில்லை. 

ஆகவே அனைத்து ரயில் நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட மூன்று மனுக்களை கொடுத்தனர். அமைச்சர் ஆவண செய்வதாக வாக்களித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க செயலாளர் சங்கர் மணி, மனித வள மேம்பாட்டு அதிகாரி ரத்தினவேல் ராஜன், சங்கர் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் இயக்குநர் சங்கரநாராயணன், டிக்கெட்நாடு நிறுவனர் தங்கவேல் புகழ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory