» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு!

சனி 27, டிசம்பர் 2025 8:26:28 AM (IST)



விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துவரந்தை கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டுமான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

இந்நிலையில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் அதை கிராமத்தைச் சேர்ந்த தனிநபர்கள் சர்வே எண்-127/2-ல் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கட்டுமான பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து கால தாமதம் இருந்து வருகிறது. இதனால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரி மனு அளித்தனர். ஆனால் பல மாதங்களாகியும் தற்போது வரை தனிநபர்களின் ஆக்கிரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று (26.12.2025) தங்களது கோரிக்கையான தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வரை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல மாட்டோம்... எனக்கூறி பல மணி நேரங்களாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை (27.12.2025) கிராமத்திற்கு நேரில் சென்று நில அளவீடு செய்து உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றி தரப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory