» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீதிபதியை பதவி நீக்க கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு : பாஜக வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!
புதன் 17, டிசம்பர் 2025 3:40:57 PM (IST)

திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய கோரி சென்னையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்காத திமுக அரசு கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்றத்தில் தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் குமரகுரு தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பதவி நீக்க தீர்மானத்தை ரத்து செய்யவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது என்ன செயல்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 4:35:36 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி எம்.பி தலைமையில் குழு நியமனம்!
புதன் 17, டிசம்பர் 2025 3:58:09 PM (IST)

அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி : தலைமையாசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 17, டிசம்பர் 2025 3:47:00 PM (IST)


.gif)