» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர்!

வியாழன் 11, டிசம்பர் 2025 11:55:29 AM (IST)



திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார்  திமுகவில் இணைந்தார்.

நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, மதிமுக, அதிமுக என பல கட்சிகளில் வலம் வந்த நாஞ்சில் சம்பத் இணைந்தார். இதனால் தவெகவுக்கு பலம் கூடியதாக பேசப்பட்ட நிலையில் விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (11-12-2025) காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளிக் கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் - "தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனத்  தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

அதுபோது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ்,  ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்துள்ள பி.டி.செல்வக்குமார், விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் எனத் தெரிகிறது. தவிர இவர், ’கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் விஜய்யுடன் நடித்தும் உள்ளார். மேலும், விஜய்யின் ‘சுறா’, ‘வில்லு’ ‘போக்கிரி’ ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory