» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

வெள்ளி 21, நவம்பர் 2025 11:09:13 AM (IST)

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்; மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதேபோல, ஆளுநர்கள் உரிய காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும்! ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம்!

உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் இரண்டு அரசுகள் செயல்படக்கூடாது. அரசியலமைப்புக்கான நீதிபதிகள், அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டுமே தவிர, அதற்கு மேல் ஒருபோதும் செயல்படக்கூடாது.

மசோதாவை ரத்து செய்யவோ, பாக்கெட் வீட்டோவைப் போல (மசோதா சட்டமாக மாறுவதைத் தடுப்பது) பயன்படுத்தவோ ஆளுநருக்கு நான்காவது வழி இல்லை. அதேபோல வெறுமனே நிறுத்திவைக்கவும் அவருக்கு வழி இல்லை. ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காலவரையின்றி தொடர்ந்து தாமதப்படுத்த முடியாது. ஆளுநர் ஒரு மசோதாவை பரிசீலிப்பதற்கு காலத்தாமதம் செய்தால், நீதிமன்றத்தை அணுகி, ஆளுநர்கள் வேண்டுமென்றே செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory