» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!

சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)



நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனித் தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருகல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 4ம் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம மூகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. 

தொடா்ந்து மாலை மாற்றும் வைபவம் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்றன. சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரை வார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹர..ஹர சிவ..சிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. தொடர்ந்து வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் தேவாரம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை அம்மன் ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 18-ந் தேதி இரவில் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடுபட்டிணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory