» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் : இபிஎஸ் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 10:50:05 AM (IST)
முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச்செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க சிலர் முயற்சி: நடிகர் அஜித்குமார் விளக்கம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:29:05 PM (IST)

தீராத கலைத்தாகம், தணியாத நாட்டுப்பற்று: கமலுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:45:16 AM (IST)

தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி புகார் எதிரொலி : இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 11:13:33 AM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)


.gif)