» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)
ஆலங்குளம் அருகே குடும்பத்தகராறில் மாமியாரை மருமகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரம் மனைவி கருப்பதுரைச்சி (53). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரம் இறந்துவிட்டார். இதனால் கருப்பதுரைச்சி கேரளாவில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
ஊத்துமலையில் உள்ள வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கருப்பதுரைச்சி கேரளாவில் இருந்து ஊருக்கு வந்தார். இதையடுத்து தனது மகள்களான கோமதி, காளீஸ்வரி (33) குடும்பத்தை கருப்பதுரைச்சி விருந்துக்கு அழைத்தார். நேற்று முன்தினம் திருவிழா முடிந்த நிலையில் நேற்று காளீஸ்வரியின் கணவரான சுரண்டை அருகே உள்ள கீழ பொய்கையை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன் (40) தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே திடீரென்று குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனை கருப்பதுரைச்சி கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தனது மனைவி காளீஸ்வரியை வெட்ட விரட்டினார். அவர் அலறிக்கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினார். இருப்பினும் விரட்டிச் சென்ற பாலசுப்பிரமணியன், காளீஸ்வரியின் கையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே பாலசுப்பிரமணியன் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மாமியார் கருப்பதுரைச்சியை சரமாரியாக வெட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலி ஜீசர், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பேச்சியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கருப்பதுரைச்சி பரிதாபமாக இறந்தார். காளீஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலசுப்பிரமணியனை தேடி வந்தனர். இதை அறிந்த அவர் ஊத்துமலை போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூதாட்டிகள் இருவரை கொன்று நகை கொள்ளை : கொலையாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:40:16 PM (IST)

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க சிலர் முயற்சி: நடிகர் அஜித்குமார் விளக்கம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 12:29:05 PM (IST)

தீராத கலைத்தாகம், தணியாத நாட்டுப்பற்று: கமலுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:45:16 AM (IST)

தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி புகார் எதிரொலி : இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 11:13:33 AM (IST)

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் : இபிஎஸ் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 10:50:05 AM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)


.gif)