» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திரப் பண்டிகை நிறைவு விழா : ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:54:53 PM (IST)

நாசரேத்தில் நடந்த திருமண்டல ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவில் ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பேராயர் ஐசக் வரபிரசாத் வழங்கினார்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 22 வது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகையை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் 22 வது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிரதமப்பேராயரின் ஆணையாளரும், பேராயருமான (பொறுப்பு) ஐசக் வரபிரசாத் தலைமை வகித்து அருட்செய்தி கொடுத்தார்.இந்த ஆராதனையில் திரளானோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து பேராலய வளாகத்தில் வருடாந்திர கூட்டம் நடந்தது. திருமண்டல பிரதமப்பேராயரின் ஆணையாளர் ஐசக் வரபிரசாத் தலைமை வகித்தார். கோவில்பட்டி சபை மன்ற தலைவர் சாமுவேல் ஜெபம் செய்தார். சாயர்புரம் போப் சபை மன்ற தலைவர் டேவிட் ராஜ் வரவேற்றார்.திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திருமண்டல நிர்வாக செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல நிர்வாக கமிட்டி உறுப்பினர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஆகியோர் பேசினர்.
திருமண்டல தகவல் தொடர்பு துறை இயக்குநர் பாஸ்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவை முன்னிட்டு 13 பேருக்கு கிரைண்டர், 33 பேருக்கு தையல் இயந்திரம், 7 பேருக்கு ஆடுகள், 15 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு வீடு பழுது பார்த்தல், 7பேருக்கு மருத்துவ செலவு , ஒரு நபருக்கு ஏழை நிதி உதவி மற்றும் திருமண்டலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சார்பில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் திருமண்டல துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப், தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம், மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் சபை மன்ற தலைவர் டேனியல் எட்வின், தாவீது சுந்தரனார் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில்ராஜ், சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இயக்குனர் ஜான் சாமுவேல், சமூக நலத்துறை இயக்குனர் ஜெபக்குமார் ஜாலி, நற்செய்தி அருட்பணித்துறை இயக்குனர் செல்வசிங் ஆர்தர், குருவானவர்கள் ஞானசிங் எட்வின், டேவிட் ஞானையா, நவராஜ், ஆல்வின், ஆசீர் சாமுவேல், தனசேகர் ராஜா, ஆபிரகாம் ரஞ்சித், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் ஜெயக்குமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி, மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர்,நாசரேத் சேகர முன்னாள் பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், முன்னாள் செயலாளர் எலியேசர், ஆனந்தராஜ் ,எபனேசர், ராஜசிங் மற்றும் திருமண்டலத்தில் உள்ள குருமார்கள், பள்ளி, கல்லூரிகளைச்சேர்ந்த தாளாளர்கள்,முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், திருமண்டல நிர்வாகிகள், திருச்சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:02:17 AM (IST)

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

தூத்துக்குடியில் உலக நன்மைக்காக சிறப்பு துவா : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 25, அக்டோபர் 2025 4:56:22 PM (IST)


.gif)