» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே வருகிற 27ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. 

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற 27.10.2025 திங்கள்கிழமை அன்று திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ஒரு ஜோடி முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற 27 ந் தேதி திங்கட்கிழமை திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் வண்டி எண் 06106 திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில்  திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் வண்டி எண் 06105 இரவு 11 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 28 ந் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். 
 
இந்த சிறப்பு ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில்  நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய பெட்டிகள் என  மொத்தம் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory