» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தெருநாய் கடித்து மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயம் : அரசு மருத்துவமனையில் அனுமதி

வெள்ளி 24, அக்டோபர் 2025 8:22:40 AM (IST)

திருச்செந்தூர் அருகே தெருநாய் துரத்தி துரத்தி கடித்ததில் பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைகிணறு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் கீழநாலுமூலைகிணறு மெயின்ரோட்டில் சென்ற பொதுமக்கள், வியாபாரி, பள்ளி மாணவ, மாணவியரை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த தெருநாய் கடித்ததில் பரமன்குறிச்சி பொத்தரங்கன்விளையை சேர்ந்த சம்சா வியாபாரி திருநீலகண்டன் (வயது 72), பிச்சிவிளை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நாகதினேஷ் (13), கீழநாலுமூலைகிணற்றில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி முத்துலட்சுமி (12), பாலமுருகன் (42), மணிஷ்சர்மா (10), சதானந்தா (5), அன்பு (40), ஆறுமுகபாண்டி (58), வள்ளியம்மாள் (50) உள்பட 14 பேரை நாய் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்தனர். 

மேலும் பலர் சாலையில் வேகமாக ஓடி தெருநாயிடம் இருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த 14 பேரும் பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கீழநாலுமூலை கிணற்றில் தெரு நாய் கடித்து 14 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory