» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

திண்டுக்கல், திருநெல்வேலியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸஙபு நாகராஜ் தலைமையிலான போலீசார் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

செல்வசேகரன் மீதான கனிமவள முறைகேடு தொடர்பாக திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் உள்ள அவரது இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அவர் பல லட்சங்களை பெற்றதாக தகவல் வந்ததால் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory