» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 7:53:06 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெயரில் கந்தசஷ்டி தகடுகளை விற்பனை செய்யவோ, பணம் வசூலிக்கவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா முதல் நாளன்று யாகசாலையில் வெள்ளி, செம்பு தகடுகள் (யந்திரங்கள்) வைக்கப்பட்டு பூஜைகளுக்குப் பின்னர், ஆறாம் நாள் சூரசம்ஹார நாளன்று யாகசாலையிலிருந்து எடுக்கப்பட்டு கோயில் அலுவலகம் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சஷ்டி யாகசாலை தகடுகள் (யந்திரம்) விற்பனை செய்யப்படுவதாகக் கூறி பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்குடன் சிலர் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் விடியோக்கள் வெளியிட்டு பகிர்ந்து வருவது கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்துள்ளது. கோயில் நிர்வாகத்தால் எந்தவொரு தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ கந்தசஷ்டி தகடுகளை விற்பனை செய்யவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, பக்தர்கள் சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வரும் தவறான விளம்பரங்கள் அல்லது இணைப்புகள் மூலம் பணம் செலுத்த வேண்டாம். இத்தகைய தவறான தளங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். கோயில் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்தது : சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:54:33 PM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு : யு.டி.ஐ.எஸ்.இ. தகவல்
வெள்ளி 24, அக்டோபர் 2025 11:55:14 AM (IST)

தன் மகளை விட நன்றாக படித்த மாணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:43:22 AM (IST)

தொடர் மழை: நெல்லை, தூத்துக்குடியில் 67 குளங்கள் நிரம்பின!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:36:51 AM (IST)

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீர் உயர்வு? அதிகாரிகள் விளக்கம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)