» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)

தமிழகத்தில் 4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகிய பதவிகளில் 2025-ம் ஆண்டு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகியது. இப்பதவிகளுக்கு ஒரே கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி தேர்வு நல்ல முறையில் நடைபெற்றது. 

இந்தாண்டு குரூப் 4 தேர்வை 11.48 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு இடத்திற்கு தோராயமாக 250 பேர் என்ற விதம் போட்டி நிலவுகிறது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிராபகர் அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் இறுதியில் 727 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. தற்போது மொத்தம் 4,662 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 4 முடிவுகள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

முடிவுகள் வெளியானதும், அடுத்தக்கட்டமாக கட்-ஆஃப் அடிப்படையில் இணையதளம் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் பதிவு எண்கள் இடம்பெற்று இருக்கும். தெரிவு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் நேரடியாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory