» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!

புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் இரவு வரையிலும் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் மழை தூறிக் கொண்டே இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் காட்டாற்று தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்ததால் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் ராமநதி, கடனாநதி, சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகின்ற தண்ணீரும் தாமிரபரணியில் கலப்பதால் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வருகிறது. தண்ணீர் கலங்கலாகவும், அமலைச்செடிகளை இழுத்துக் கொண்டும் வருகிறது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு நடத்தினார். மேலும் சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட ஆற்றுநீர் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் கூடுதல் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அங்கு கலெக்டர் சுகுமார் நேற்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 91 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்து நேற்று 93.25 அடியாக இருந்தது. இதேபோன்று சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியாகவும் உயர்ந்துள்ளது.

52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 12 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கடனாநதி அணை ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 56 அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3½ அடி உயர்ந்து 66 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 120 அடியாக உள்ளது.

36.10 அடி முழுக்கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. தீபாவளி பண்டிகையொட்டி குண்டாறு தண்ணீர் மறுகால் வருகின்ற பகுதிகளும் அடவினார் அணைப்பகுதிலும் ஏராளமான பொது மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory