» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க.வின் உருட்டுக்கடை அல்வா: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

வெள்ளி 17, அக்டோபர் 2025 4:54:21 PM (IST)

திமுக 10 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை, உருட்டுக்கடை அல்வாதான் கொடுத்துள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2021 தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இன்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் உள்பட அங்கிருந்தவர்களுக்கு திமுக-வின் உருட்டுக்கடை அல்வா என எழுதப்பட்டிருந்த பாக்கெட்டை வழங்கினார்.

மேலும், "திமுக 2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 10 சதவீதம் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எல்லோருக்கும் அல்வா கொடுத்திட்டாங்க. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். அத்துடன் ருசியாக இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. இந்த அரசாங்கம் மக்களுக்கு அல்வா கொடுத்து எப்படி ஏமாற்றுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory