» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதம் : சட்டப் பேரவையில் பரபரப்பு!

வெள்ளி 17, அக்டோபர் 2025 12:42:01 PM (IST)



தமிழக சட்டசபையில் தவாக தலைவர் வேல்முருகனை தொடர்ந்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்காததால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பண்ருட்டி தொகுதி உறுப்பினர் தி.வேல்முருகன் பேசினார். அவர் பேசும்போது, "அந்தியூர் பவானி ஒரு பகுதி மக்களுக்கு விவசாயம் செய்ய நீர் கிடைக்கவில்லை. அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அந்தியூர் பிரச்சினையை பற்றி பேச அந்த தொகுதி உறுப்பினர் இருக்கிறார்" என்று பதில் அளித்தார்.

அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு கூறியதால் கடும் கோபம் அடைந்த வேல்முருகன், அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், சபாநாயகர் அப்பாவு, அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி அளிக்கவில்லை. இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வரும் நிலையில் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்டுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory