» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை

வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

போக்சோ கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டை சிறையில் டி.ஐ.ஜி. முருகேசன் விசாரணை நடத்தினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் வினோத்குமார் (30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனால் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் அவரை பிடித்து சமீபத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் வினோத்குமார் தனது துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறைக்கு வந்தார். அவர் சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. வினோத்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது முழுமையாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory