» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் அன்புமணியின் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

திங்கள் 6, அக்டோபர் 2025 12:51:24 PM (IST)

நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபயணம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்கிடையில், கரூரில் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது அதற்கான விதிமுறைகளை வகுக்கும் பணி தொடங்கி உள்ளது.

இந்நிலையில், நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி நாளை (அக்.7) நடத்தவிருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போலீசார் அறிவுறுத்தலை ஏற்று அன்புமணி தனது நடைபயணத்தை ரத்து செய்தார். மேலும் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory