» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்துகளில் மாணவ, மாணவிகள் ஆபத்தான பயணம் : கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

திங்கள் 6, அக்டோபர் 2025 10:46:55 AM (IST)



கயத்தாறில் காலை நேரத்தில், போதுமான பேருந்துகள் இல்லாமல் மாணவ மாணவிகள் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பணி நிமித்தமாகவும், தொழில் காரணமாகவும் தினமும் ஏராளமானோர் பஸ்களில் வந்து செல்கின்றனர். மேலும் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கயத்தாறை சேர்ந்த சுமார் 462 மாணவ-மாணவிகளும், கோவில்பட்டி சுற்றுவட்டார பள்ளி, கல்லூரிகளில் சுமார் 263 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். 

இவர்கள் தினமும் காலை நேரத்தில் கயத்தாறு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்களில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாகவும், அவ்வாறு செல்லும்போது சிலர் சாலைகளில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை இருப்பதாவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இன்று காலை நேரத்தில் மாணவி ஒருவர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் வரை 2 பஸ்களே கயத்தாறு பகுதிக்கு சென்றுள்ளது. அதில் கூட்டமாக மாணவர்கள் ஏறியதால் பஸ் கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுதவிர லோக்கல் பஸ்கள் மதுரை சென்றதால்  ஒரு சில பஸ்களில் ஏற முடியாமல் தவித்தும் வருகின்றனர். 

இதனால் மாணவர்கள் சிலர் பள்ளிக்கு செல்லாமல் பஸ்களில் இருந்து இறங்கி வீடு திரும்பி விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், காலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory