» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு!

ஞாயிறு 5, அக்டோபர் 2025 9:20:44 AM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்த நிலையில், தவெக தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அரசியல் கட்சிகளின் சாலை வல நிகழ்ச்சிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கூட்ட நெரிசலில் தொண்டர்கள் சிக்கியபோதும் விஜய் உள்பட தவெக நிர்வாகிகள் சென்றுவிட்டதாக அதிருப்தி தெரிவித்தது. மேலும் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் வழக்குரைஞர்கள் குழுவுடன் ஆலோசித்த தவெக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக காவல்துறை செய்த தவறுகளை விவரிப்பதுடன், சிபிஐ விசாரணையையும் கோரவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், அதற்கடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory