» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வள்ளலாரின் சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
சனி 4, அக்டோபர் 2025 5:39:33 PM (IST)

வள்ளலார் எல்லா உயிர்களையும் நேசிக்க கற்று தந்தார். அவரது சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாளையொட்டி, சமரச சுத்த சன்மார்க்க இளைஞர்கள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாளை மிக, மிக முக்கியமான நாள். அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். ஏனெனில் அந்த நாளில் தான் தெய்வீகம் இந்த மண்ணில் அவதரித்தது. நாம் அவரை சுவாமி வள்ளலார் என்று அறிந்திருக்கிறோம்.
நாளை அவர் அவதரித்ததற்கான 202வது ஆண்டு விழா. நாம் இங்கு கூடியிருப்பதன் நோக்கம் – அவரின் போதனைகள், அவரின் வாழ்க்கை, அவரின் பணிகள் குறித்து பேசவும், பகிரவும், கொண்டாடவும் ஆகும். இங்கு மாணவர்கள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
நான் உங்களை வலியுறுத்த விரும்புவது– வள்ளலாரின் போதனைகளை மட்டும் அல்லாமல், அவர் ஏன், எப்போது, எந்த சூழலில் அவதரித்தார் என்பதைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் ஆராயுங்கள். அந்தப் பின்னணி, அந்தக் கால சூழலை நன்றாக அறிந்தால், அவர் சொன்னது எதற்காக, எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
உலகம் இன்று சந்திக்கும் 3 முக்கிய பிரச்சினைகள்– வறுமை, சூழல் , போர் இவைகளுக்கான பதில் வள்ளலாரின் போதனையில் உள்ளது. ஆனால் அதை இன்றைய காலத்திற்கு ஏற்ற மொழியிலும் வடிவிலும் நாம் முன்வைக்க வேண்டும். அவரின் போதனைகள் சில தொகுப்புகளில் இருந்தாலும், அவை விதைகள் போன்றவை. ஒவ்வொரு விதையும் பெரும் மரமாக வளரக்கூடியது. அதை இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.
வள்ளலார் எல்லா உயிர்களையும் நேசிக்க கற்று தந்தார். அவரது சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். அப்போது தான் சமூக பாகுபாடு இல்லாமல், வறுமை இல்லாமல், இயற்கையோடு சண்டை இல்லாமல், ஒற்றுமையோடு வாழ முடியும். அதுவே வள்ளலாருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியும், நம் வாழ்க்கையின் பணி ஆகும். நண்பர்களே, நீங்கள் இன்று இங்கு வந்திருப்பது உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதை முன் னோக்கி கொண்டு செல்வீர்கள் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தரங்கில் சுமார் 300 இளைஞர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:36:55 PM (IST)

விஜய் உடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு: ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?
வியாழன் 9, அக்டோபர் 2025 4:44:38 PM (IST)

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? அண்ணாமலை கிண்டல்!!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:23:05 PM (IST)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

கோவையில் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 9, அக்டோபர் 2025 3:54:49 PM (IST)
